விஷாலுக்கு யார் கெடுதல் செய்திருந்தாலும், அந்த பாவத்தை அனுபவித்துதான் ஆக வேண்டுமென்று ஜெயலலிதாவின் தோழி கீதா கூறியிருக்கிறார்.
ஒரு யூடியூப் சேனலுக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி கீதா பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில் கூறியிருப்பதாவது , “விஷாலின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பக்கூடாது. உடல் நிலை பிரச்னை குறித்து கொச்சை படுத்தி பேசக் கூடாது. மற்றவர்கள் இதை ஒரு பாடமாக எடுத்து கொள்ள வேண்டும். விஷாலுக்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. விஷாலுக்கு சிகிச்சை அளித்த, டாக்டர் ஒரு தகவலை சொன்னதாக எனக்கு தெரிந்தவர் என்னிடம் சொன்ன போது அதிர்ச்சியடைந்தேன். அதாவது, விஷாலுக்கு கழுத்தில் நரம்பு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த நண்பர் என்னிடத்தில் கூறினார்.
கிட்டத்தட்ட விஜய்காந்த்துக்கும் இப்படித்தான் பாதிப்பு வந்தது. விஜய்காந்த் போன்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுவிடுவார் என்றும் அந்த டாக்டர் சொன்னாதாக அந்த நண்பர் என்னிடத்தில் கூறினார். இதெல்லாம் உண்மையா? பொய்யா? என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், சினிமாவில் உச்சத்துக்கு சென்றதும் தலைக்கணம் ஏறி விடுகிறது. சில பழக்கவழக்கங்கள் சேர்ந்துவிடுகின்றன.
பலரும் போதைக்கு அடிமையாகிவிடுகிறார்கள். இது உண்மையிலேயே தவறு. ஒருவயதுக்கு மேல், பெற்றோர்களின் பேச்சை குழந்தைகள் கேட்பதில்லை. விஷாலோட கேங்கில் இருக்கும் ஒருவர் கொகைன் பயன்படுத்துவதாக என்னிடம் கூறியுள்ளார். இதையெல்லாம் பார்க்கும் போது, பாடகி சுசித்ரா சொல்வது உண்மைதான் என்று நினைக்க வைக்கிறது. இப்போ, விஷாலே ஒரு பேச்சு பொருளாக மாறிட்டாரு. நான் ஒரு முறை விஷாலை பார்த்த போது, பவுன்சர்கள் 10 பேர் சுற்றி இருந்தாங்க. அரசியலுக்கு வர்ரேனு சொல்றீங்க… இப்படி, பவுன்சர்களை வச்சிருந்தா நீங்க எப்படி மக்களிடயே பழகுவீங்க? என்று அவரிடத்தில் நேரடியாக கேட்டேன். அதற்கு அவர் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
விஜயகாந்த் எவ்வளவு பெரிய நடிகர். ஒரு முறை ஒரு படபிடிப்பில் சந்தித்த போது, என்னை சேரில் உட்கார வைத்து அவர் தரையில் அமர்ந்து பேசினார். இப்போதுள்ள இளைய தலைமுறையினர் விஜயகாந்திடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். திமிரும் அகம்பாவமும் உங்களை வாழ்க்கையில் கீழே தள்ளி விடும். விஷால் சின்ன பையனா இருக்காரு. அவர் திருந்தி நல்லபடியாக வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
சினிமா அவ்வளவுதானா? துபாயில் அஜித் அதிர்ச்சிப் பேட்டி!
’நாங்கள் இரட்டை வேடம்னா, நீங்கள் நான்கு வேடம்’- சட்டமன்றத்தில் ஸ்டாலின் vs எடப்பாடி