நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் வைரம், தங்க நகைகள் காணவில்லை என்று தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை செயிண்ட் சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வசித்து வருகிறார்.
இந்நிலையில், தேனாம்பேட்டை வீட்டின் லாக்கரில் இருந்த பல லட்சம் மதிப்பிலான 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகளைக் காணவில்லை என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
குறிப்பாக வீட்டில் பணியாற்றக்கூடிய பணியாளர்கள் மீது சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவருடைய தங்கையின் திருமணத்தின் போது தற்போது காணாமல் போன நகைகளைப் பயன்படுத்தியதாகவும் பின்னர் அதனை வீட்டில் உள்ள லாக்கரில் வைத்திருந்ததாகவும் ஆனால் தற்போது நகைகள் மாயமாகியிருப்பதாக ஐஸ்வர்யா குறிப்பிட்டுள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் புகாரின் அடிப்படையில் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோனிஷா
தமிழ்நாடு பட்ஜெட் இன்று தாக்கல்!
“முன்பே வா என் அன்பே வா” பாடல்: ரஹ்மான் சொன்ன சீக்ரெட்!