ஜீவா நடிக்கும் ‘பிளாக்’ : ரிலீஸ் எப்போது தெரியுமா?
அறிமுக இயக்குனர் கே.ஜி.பாலசுப்ரமணி இயக்கத்தில் ஜீவா – பிரியா பவானி சங்கர் இணைந்து நடிக்கும் ‘ பிளாக் ‘ திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ஜீவா – பிரியா பவானி சங்கர் இணைந்து நடிக்கும் ‘ பிளாக் ‘ திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகும் இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணியம் , “நம்மை சுற்றி இருக்கும் இருட்டையும், நமக்குள் இருக்கும் இருட்டையும் வெளிச்சம் போட்டு காட்டுவதே இந்தப் படத்தின் கரு” எனப் படம் குறித்து தெரிவித்துள்ளார்.
ஒரே இரவில் நடைபெறும் இந்தப் படத்தின் கதையை விறுவிறுப்பான திரில்லர் ஜானரில் படமாக்கியிருப்பதாகவும் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தை பொடன்சியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்ய, பிலோமின் ராஜ் படத்தொகுப்பு வேலைகளை மேற்கொண்டுள்ளார்.
செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ள நிலையில், எந்தத் தேதி என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– ஷா
கொல்லம் எம்.எல்.ஏ முகேஷ்க்கு முட்டு கொடுக்கும் பினராயி விஜயன்… கைதுக்கு தடை விதித்த நீதிமன்றம்!
ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு தடையில்லை : உயர்நீதிமன்றம்