ட்வின்ஸாக நடித்த ஜீவா டிடி

சினிமா

காபி வித் காதல் படத்தில் தானும் ஜீவாவும் ட்வின்ஸாக நடித்திருப்பதாக நடிகை திவ்யதர்ஷிணி தெரிவித்துள்ளார்.

அவ்னி சினி மேக்ஸ் நிறுவனத்தின் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏ.சி.எஸ். அருண்குமார் இணைந்து தயாரித்துள்ள படம் ‘காபி வித் காதல்’.

இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் கதாநாயகர்களாக நடிக்க மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழா நேற்று (செப்டம்பர் 26) சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகை திவ்யதர்ஷிணி பேசுகையில், “ஜீவாவும் நானும் இந்த படத்தில் ட்வின்ஸ் போல நடித்துள்ளோம். ஜெய் வந்து எனக்கு தம்பி மாதிரி. படப்பிடிப்பில் அவரை ‘மிட்டாய் மாமா’ என்று தான் கூப்பிடுவோம்.

நிஜத்தில் சுந்தர்.சி சார் எப்படி எல்லாருடைய குறை, நிறைகளை கேட்டு அனைவரையும் ஒன்றிணைத்து அரவணைத்துச் செல்வாரோ அதேபோலத்தான் இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரமும். இந்தக் கதாபாத்திரத்தில் நான் சரியாக இருப்பேன் என அவர் நம்பியது என்னுடைய அதிர்ஷ்டம்” என்றார்.

நடிகர் ஜீவா பேசுகையில், “சுந்தர்.சி சார் படத்தில் நடிக்கும்போது முதல் நாளே நமது டென்சனை குறைத்து விடுவார்.

எப்படியிருந்தாலும் 45 நாட்களுக்குள் படத்தை முடித்துவிட வேண்டும் என்பதை மனதில் வைத்து செயல்படுவார். அவரது படப்பிடிப்பிற்கு சென்று திரும்பும்போது 100% சந்தோஷத்துடன் திரும்புவோம்.

எல்லோரும் அழகாக ஒன்றிணைந்து நடித்தாலும் எங்களுக்குள் நடிப்பில் ஒரு போட்டி இருந்து கொண்டுதான் இருந்தது.

எனக்கு நிஜத்தில் சகோதரி இல்லை. ஆனால் அப்படி இருப்பது போல நினைத்துக்கொண்டு படத்தில் நடிப்பது ரொம்பவே கஷ்டம். ஆனாலும் அதை சரியாக செய்துள்ளேன்” என்றார்.

இராமானுஜம்

சென்னையில் துவங்கும் பத்து தல படப்பிடிப்பு!

பண்ருட்டி ராமச்சந்திரனை அரசியல் ஆலோசகராக நியமித்த பன்னீர்

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *