நாயகன் ஜெயம் ரவி இல்லாமல், ‘தனி ஒருவன் 2’ படத்தின் பூஜை சென்னையில் மிகவும் எளிமையாக நடைபெற்றுள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘தனி ஒருவன்’ படம் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. அதிகம் எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியான இப்படம் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பால், திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி நன்கு கல்லா கட்டியது.
ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்த ‘தனி ஒருவன்’ படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து இருந்தார். மோகன் ராஜா இயக்கிய இப்படம் அந்த ஆண்டின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக அமைந்தது.
இதையடுத்து இப்படத்தின் 2-வது பாகத்தினை எடுக்கப்போவதாக மோகன் ராஜா அறிவித்தார். ரவி ஹீரோவாகவும், நயன்தாரா ஹீரோயினாகவும் நடிக்கும் இப்படத்திற்கு ஸ்க்ரிப்ட் முதற்கொண்டு எல்லாமே ரெடியாக இருக்கிறது. ஆனால் வில்லன் தான் கிடைக்கவில்லை.
ஹீரோவுக்கு சமமான முக்கியத்துவம் வில்லனுக்கும் இருப்பதால், இயக்குநர் மோகன் ராஜா வில்லனாக நடிப்பவரை தீவிரமாக வலைவீசித் தேடி வருகிறாராம். இந்த நிலையில் சமீபத்தில் இப்படத்திற்கான பூஜை சென்னையில் நாயகன் ஜெயம் ரவி இல்லாமல் நடைபெற்றுள்ளது.
காஷ்மீரில் நடைபெற்று வரும் தன்னுடைய அடுத்த படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக நடித்து வருவதால், இதில் அவர் கலந்து கொள்ளவில்லையாம். முதல் பாகத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தான் இந்த பாகத்தையும் தயாரிக்க இருக்கிறது.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் ‘GOAT’ படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால், அந்த படத்தின் ஷூட்டிங் முடிந்தவுடன் ‘தனி ஒருவன் 2’ ஷூட்டிங் தொடங்கி விடும் என கூறப்படுகிறது. அநேகமாக ஏப்ரல் மாதம் படத்தின் ஷூட்டிங் தொடங்கிட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அடுத்தடுத்து ரெய்டு… தமிழ்நாட்டு நிறுவனங்கள் பாஜகவில் கொட்டிய கோடிகள் – பாகம் 2