முன்பெல்லாம் ஒரு திரைப்படம் திரையரங்குகளில் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலாக இருப்பார்கள். இன்று அதே போல் OTT-யில் திரைப்படங்கள் எப்பொழுது வெளியாகும் என்று காத்திருக்கத் துவங்கி விட்டனர்.
அந்தவகையில் அடுத்ததாக ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷின் சைரன் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக இருக்கிறது. அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.
நடிகர் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கிய திரைப்படம் சைரன். ஜிவி பிரகாஷ், சாம் சி எஸ் இருவரும் இணைந்து இந்த படத்திற்கு இசையமைத்திருந்தனர்.
ஆம்புலன்ஸ் ஓட்டுநராக ஜெயம் ரவி நடித்திருந்தார்.காவலில் இருக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் பரோலில் வெளியே வருகிறார். அப்பொழுது எதிர்பாராத விதமாக பல கொலைகள் நடக்கிறது.
இந்நிலையில் காவல்துறையின் சந்தேகம் ஜெயம் ரவியின் மீது திரும்ப, அடுத்து நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் தான் சைரன் படத்தின் கதை.
ஆக்ஷன் திரில்லர் கதையை, தந்தை மகள் பாசத்தை முன்னிறுத்தி கதைக்களம் அமைத்திருந்தனர். இந்நிலையில் இந்த திரைப்படம் வெளியான இரண்டு மாதங்கள் கழித்து தற்பொழுது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.
முன்னதாக ஏப்ரல் 11-ம் தேதி ஹாட் ஸ்டாரில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது 19-ம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
–பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கவினின் ஸ்டார் பட கதை இதுதானா?
அஜித் பட தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்த பிரதீப் ரங்கநாதன்
தூங்கு மூஞ்சி க்யூட்டி… ஜிவி இசையில் “டியர்” படத்தின் புது பாடல் ரிலீஸ்!