ஜெயம் ரவி நடிப்பில் இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சைரன்’. இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் கீர்த்தி சுரேஷ், யோகிபாபு, சமுத்திரகனி உள்பட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆக்ஷன் திரில்லர் ஜானரில் இந்த படம் உருவாகியுள்ளது. ஹோம் மூவீஸ் மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் சுஜாதா விஜயகுமார் இந்த படத்தை தயாரித்து உள்ளார்.
இந்த படத்தின் பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க. பின்னணி இசைக்கு சாம் C.S இசையமைத்துள்ளார். செல்வ குமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் சைரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது.
சமீபத்தில் சைரன் படம் லால் சலாம் படத்திற்கு போட்டியாக வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது சைரன் படம் பிப்ரவரி 16 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை முன்னிட்டு ஒரு புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில், நீளமான கத்தியுடன் ஜெயம் ரவி கோபத்துடன் நிற்பது போல் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பட்டர் சிக்கனை கண்டுபிடித்தது யார்? – நீதிமன்றத்தில் விசித்திர வழக்கு!
பியூட்டி டிப்ஸ்: சருமத்தில் நிற மாற்றம்… காரணங்களும் தீர்வுகளும்!