ஜெயம் ரவியை இயக்கப் போகும் சூப்பர் ஹிட் இயக்குநர்!

Published On:

| By Kavi

பசங்க, வம்சம், இது நம்ம ஆளு, பசங்க 2, கடைக்குட்டி சிங்கம், எதற்கும் துணிந்தவன் போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் பாண்டிராஜ்.

கிராமத்துப் பின்னணியில் ஒரு சமூக கருத்தை திரைக்கதையில் இணைத்து ஒரு தரமான கமர்ஷியல் படத்தை இயக்குவதில் வல்லவர்.

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஷாலை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க பாண்டிராஜ் திட்டமிட்டு இருந்தார். ஆனால் அந்த படத்தின் பணிகள் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அடுத்ததாக நடிகர் ஜெயம் ரவியை ஹீரோவாக வைத்து ஒரு புதிய படத்தை இயக்க பாண்டிராஜ் தயாராகி வருகிறார் என்று கூறப்படுகிறது.

ஜெயம் ரவியின் அடங்க மறு, சைரன் ஆகிய படங்களை தயாரித்த ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தான் தற்போது பாண்டிராஜ் – ஜெயம் ரவி கூட்டணியில் உருவாக இருக்கும் இந்த படத்தையும் தயாரிக்கிறது என்றும், குடும்பங்கள் கொண்டாடும் வகையில் இந்த திரைப்படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இந்த படம் குறித்த அறிவிப்பு ஜூன் 1 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இறைவன், சைரன் போன்ற திரைப்படங்கள் ஜெயம் ரவிக்கு எதிர்பார்த்த வெற்றியை தராத நிலையில், அடுத்தடுத்து அவரது நடிப்பில் பிரதர், ஜீனி, காதலிக்க நேரமில்லை ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இது மட்டுமின்றி மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 திரைப்படத்திலும் ஜெயம் ரவி நடிக்க இருக்கிறார்.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: தலைவலிக்காக அடிக்கடி மாத்திரைகள் போடுபவரா நீங்கள்?

கிச்சன் கீர்த்தனா : வெஜ் கோலா உருண்டை!

திராவிட இயக்கக் கதைகளால் பாடத்திட்டம் நிரம்பியுள்ளது: ஆளுநர் ரவி காட்டம்!

மறுபடியும் அதே உருட்டு: அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment