ஜெயம் ரவிக்கு மீண்டும் கொரோனா!

சினிமா

நடிகர் ஜெயம்ரவிக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று, இந்தியாவிற்குள் வந்த போது அதனால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர் நடிகர் ஜெயம் ரவி.

தற்போது கொரோனா தொற்று அதன் தாக்கம் குறைந்திருந்தாலும், இன்னும் முழுமையாக இந்தியாவை விட்டு சென்றுவிட வில்லை. மேலும் உருமாறிய கொரோனா வைரஸ் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகிறது.

எனவே மக்கள் இதன் தீவிரத்தை உணர்ந்து, எங்கு சென்றாலும் மாஸ்க் அணிவதை கடைப்பிடிக்க வேண்டும்.  சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் அப்போதுதான் கொரோனா அதிகமாவதை தடுக்க முடியும் என உலக சுகாதார மையம் தொடர்ந்து  அறிவுறுத்தி வருகிறது.

கொரோனா தாக்கம் குறைந்ததால் மாஸ்க் போடுவதை மக்கள் குறைத்து விட்டனர். இந்நிலையில் நடிகர் ஜெயம்ரவி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை கொரோனா பரிசோதனை செய்த போது பாசிட்டிவ் என வந்ததாகவும்,  எனவே தற்போது மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி, தன்னை தனிமை படுத்திக்கொண்டு, உரிய சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும், தன்னுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த இரண்டு மாதமாக “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் விளம்பர நிகழ்வுக்காக இந்தியா முழுவதும் அத்திரைப்பட குழுவினருடன் ஜெயம் ரவி கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இராமானுஜம்

நிறையும் குறையும் : சர்தார் விமர்சனம்!

ஸ்ருதிஹாசனின் நிறைவேறிய ஹாலிவுட் கனவு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *