இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம்ரவி – நித்யா மேனன் நடிப்பில் உருவாகி வரும் ’காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்தை வருகிற டிச.20ஆம் தேதி வெளியிட அப்படக்குழு திட்டமிட்டுள்ளது.
ஒரு வித்தியாசமான காதல் கதையாக இந்தப் படம் இருக்கும் என படக்குழுவினர் படம் குறித்து தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தில் யோகி பாபு, வினய் ராய், ஜான் கொக்கேன், லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் கேவ்மிக் ஒளிப்பதிவு செய்ய, லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு வேலைகளை மேற்கொண்டுள்ளார்.
2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் நிறைவடைந்தது. ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பிரதர்’ திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.
மேலும், வர்த்தக ரீதியாகவும் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தையே அளித்தது. இந்த நிலையில், தற்போது ரிலீஸுக்கு தயாராகி வரும் ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்தை வருகிற டிச.20ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு அதற்கான புரோமோஷன் வேலைகளில் படக்குழு இறங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
’’உயிரே’ பட கிளைமாக்ஸே வேற!’ – நடிகை மனிஷா கொயராலா
விண்வெளி நாயகா… ‘THUG LIFE’ படத்தின் ரிலீஸ் தேதி தெரியுமா?