“வதந்தியை கிளப்புவர்கள் மெச்சூரிட்டி இல்லாதவர்கள்” : ஜெயம் ரவி காட்டம்!

Published On:

| By Kumaresan M

jayam-ravi-says-rumours-seldom-affect-him

சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாகஅறிவித்தார். ஆனால் ஆர்த்தியோ ரவி எடுத்த முடிவு தனக்கு தெரியாது என்று விளக்கம் அளித்தார். இதனையடுத்து ஜெயம் ரவி – ஆர்த்தி டாபிக் கோலிவுட்டின் தலைப்பு செய்தியாக மாறியது. இதற்கிடையே, பிரபல பாடகி கென்னிஷாவுடன்  ஜெயம் ரவிக்கு தொடர்பு இருப்பதாகவும் வெளியானது. இந்த தகவலை இருவருமே மறுத்திருந்தனர். இருவரும் சேர்ந்து மன நல ஆலோசனை மையம் திறக்கப் போவதாகவும் அதற்காக பணியாற்றிக் கொண்டிருப்பதாகவும் ஜெயம் ரவி கூறினார்.

இந்த நிலையில், தீபாவளி அக்டோபர் 31 ஆம் தேதி ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர் படம் வெளியாகிறது. இதன் புரேமோஷன் நிகழ்ச்சிக்காக யூடியூப் சேனலில் நடிகர் ஜெயம் ரவி பேசினார். அப்போது, விவாகரத்து குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

அவர், ”தற்போது என்னை பற்றி ஏராளமான வதந்திகள் வருகின்றன. அப்படி, வதந்தியை கிளப்புபவர்கள் உண்மையில் மெச்சூரிட்டி இல்லாதவர்கள். தற்போது, வேலையில் மட்டுமே முழு நேரமும் கவனம் செலுத்தி வருகிறேன். பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் சின்னதாக ஏதாவது செய்து விட்டாலே பெரிதாக ஊதி விடுவார்கள். அப்படிதான் என் வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருக்கிறது.

நல்லதோ கெட்டதோ அதை தேவையில்லாமல் பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் பேசுவதை  நாம் தடுக்கவும் முடியாது. கண்டுக்காமல் போய் கொண்டிருக்கவும் முடியாது. இப்போது எனது மனநிலை, உடல்நிலை எல்லாமே நல்ல நிலையில் உள்ளது.  ஒவ்வொருவரையும் பொறுப்புடன் நடந்து கொள்ள நாம் கேட்டுக் கொள்ள முடியாது. நாம் நம்மை புரிந்து கொண்டிருக்கும் போது, மற்றவர்களின் கருத்துக்களை பற்றி நாம் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும்?” என்று கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

கோவையில் இருந்து தொடங்கும் கள ஆய்வு : ஸ்டாலின் அறிவிப்பு!

”இதய வாசலை திறந்து காத்திருப்பேன்” : தவெக தொண்டர்களுக்கு 3வது முறையாக விஜய் கடிதம்!

மறுபடியும் தங்கம் விலை ஏறுதே… மக்கள் ஏமாற்றம்!

வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment