கமல் ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து, மீண்டும் ஒரு நடிகர் விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாயகன் படத்திற்கு பிறகு சுமார் 34 வருடங்கள் கழித்து மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் ‘தக் லைஃப்’.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் ‘தக் லை ஃப்’ படத்தை கமலின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் என மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
தொடக்கத்தில் கமலுடன் இணைந்து ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கௌதம் கார்த்திக், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி என முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்து வந்தனர்.
கமலின் 234-வது படமாக உருவாகி வரும் ‘தக் லைஃப்’ ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகவும் உள்ளது. சமீபத்தில் துல்கர் சல்மான் கால்ஷீட் பிரச்சினை காரணமாக இப்படத்தில் இருந்து விலகினார்.
இந்த நிலையில் தற்போது ஜெயம் ரவியும் படத்தில் இருந்து வெளியேறி இருப்பதாக தெரிகிறது. தேர்தல் காரணமாக கமல் மிகவும் பிஸியாக இருப்பதால் ஜெயம் ரவி கால்ஷீட் கொடுத்த தேதிகளில் படத்தின் ஷூட்டிங் நடைபெறவில்லை என தெரிகிறது.
எனவே தற்போது ‘ஜெனி’, ‘காதலிக்க நேரமில்லை’ படங்களில் பிஸியாக இருக்கும் ஜெயம் ரவி கால்ஷீட் பிரச்சினையால் ‘தக் லைப்’ படத்தில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே துல்கர் சல்மானிற்கு பதிலாக சிம்புவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதோடு சேர்த்து ஜெயம் ரவிக்கு பதிலாகவும், புதிய நடிகரை தேடும் நிலையில் படக்குழு இருக்கிறது.
இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது தேர்தலுக்கு பிறகு தான், மீண்டும் ‘தக் லைஃப்’ படக்குழு ஷூட்டிங் செல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அன்று பூஜ்ஜியம்… இன்று பாஜகவுடன் கூட்டணியா? – ராமதாஸை விமர்சித்த எடப்பாடி
IPL 2024: 454 நாட்களுக்கு பிறகு ‘கேப்டனாக’ களமிறங்கும் ரிஷப் பண்ட்…சறுக்குவாரா? சாதிப்பாரா?
பாஜக 4% தான்… போட்டி திமுக, அதிமுகவுக்கு இடையிலதான்! – எஸ்.பி. வேலுமணி