இயக்குநர் ஆண்டனி பாக்கியராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் பெயர், நடிகை பெயர், இசையமைப்பாளர் பெயர் ஆகியவற்றைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக ஜெயம் ரவி திகழ்கிறார். தற்போது இவர் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் அப்டேட்களை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்கியராஜ் இயக்கும் இப்படத்திற்கு சைரன் என்று பெயர் வைத்து, மோஷன் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
மேலும், படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாகக் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். ஆகையால், ஜெயம் ரவி கீர்த்தி சுரேஷ் இணையும் முதல் படமாக சைரன் அமையவுள்ளது.
இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் சைரன் படம் உருவாக உள்ளது.

ஜெயம் ரவி தற்போது எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இப்படத்தில் பிரியங்கா மோகன் ஜெயம் ரவியுடன் இணைந்து நடிக்கிறார்.
ஜெயம் ரவி நடிப்பில் “ஜனகனமன, பொன்னியின் செல்வன், அகிலன், இறைவன்” ஆகிய படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வரவுள்ளது. தற்போது ஜெஆர் 30, “சைரன்” என இரண்டு படங்கள் தயாராகி வருகிறது.
மோனிஷா
பா.ரஞ்சித்தை கட்டியணைத்த அனுராக் காஷ்யப்: ஏன் தெரியுமா?