jayam ravi in fantasy film

ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாராகும் ஜெயம் ரவியின் ஃபேண்டஸி படம்?

சினிமா

பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான இறைவன் படம் எதிர்ப்பார்த்த வெற்றியை தரவில்லை. இதனை தொடர்ந்து அடுத்ததாக ஜெயம் ரவி நடிப்பில் சைரன் படம் வரும் பிப்ரவரி மாதம் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் தற்போது ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி படம் குறித்த ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

அறிமுக இயக்குனர் அர்ஜூனன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜீனி’. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் ஜீனி படத்தை தயாரிக்கிறது. இந்த படம் வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் 25வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படம் ஃபேன்டஸி கதைக்களத்தில் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கபி ஆகியோர் நடிக்கின்றனர். ரூ.100 கோடி பட்ஜெட்டில் இந்த படம் பிரம்மாண்டமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. சமீப நாட்களாக ஜீனி படத்தின் படப்பிடிப்பு சென்னையில், பெரிய செட்கள் அமைத்து நடைபெற்று வருகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கிளைமேக்ஸ் காட்சிகளை படமாக்க ஜீனி படக்குழு விரைவில் ஜார்ஜியா புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜீனி படத்திற்கு பின் நடிகர் ஜெயம் ரவிக்கு எம்.ராஜேஷ் இயக்கத்தில் ’பிரதர்’, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ’காதலிக்க நேரமில்லை’, மோகன் ராஜா இயக்கத்தில் ’தனி ஒருவன் 2’ ஆகிய படங்கள் லைன் அப்பில் உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

நாளை வழக்கம் போல் பரிசோதனைகள் நடத்தப்படும்: நீதிமன்றத்தில் ஜிப்மர் மருத்துவமனை!

கேலோ இந்தியா 2024: அடுத்தடுத்து 2 தங்கப்பதக்கங்களை வென்று தமிழ்நாடு அசத்தல்!

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *