நட்சத்திர ஜோடியாக வலம் வந்த நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் விவாகரத்து செய்யவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் கடந்த சில மாதங்களாக பேசப்பட்டு வந்தது.
அதற்கு இருவரும் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், இன்று தனது விவகாரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் ஜெயம் ரவி.
இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம், ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும், திரையல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும், திரை துறை நண்பர்கள், பத்திரிக்கை, ஊடக துறை மற்றும் சமுக ஊடக நண்பர்கள், என் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன்.
எனவே, மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.
நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன்.
இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது.
இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த முடிவு எனது சொந்த முடிவாகும். இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். என்னுடைய முன்னுரிமை எப்போதும் எனது நடிப்பின் மூலம் எனது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு அளிக்க வேண்டும் என்பதே.
நான் என்றும், எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன், நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை நன்றியுடன் உணர்கிறேன், எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி” என்று ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஜெயம் ரவி-க்கு தனது மனைவியின் வீட்டில் சரியான மரியாதை கிடைக்கவிலை என்று சொல்லப்பட்டு வந்தது. தற்பொது வெளிவந்துள்ள ஜெயம் ரவியின் இந்த அறிக்கை, இது உண்மைதானோ என்று ரசிகர்களை யோசிக்க வைத்துள்ளது.
மேலும் நாளை செப்டம்பர் 10-ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ள ஜெயம் ரவி, இன்று விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
“நிரபராதி என நிரூபிப்போம்”: சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான சி.விஜயபாஸ்கர் பேட்டி!
ரூ.12,381 கோடி வாடகை பாக்கி… கிண்டி ரேஸ் கோர்ஸுக்கு சீல்!
முன்மாதிரியான தமிழகத்திற்கு தர வேண்டிய நிதி எங்கே? : மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்!