பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு நடிகர் ஜெயம் ரவி, இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் பிரதர், ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சைரன், மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 என பல படங்களில் கமிட் ஆகி பிசியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான இறைவன் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்திருந்தாலும் வசூலில் எந்த பாதிப்பும் இல்லை.
இந்நிலையில் வணக்கம் சென்னை, காளி போன்ற படங்களை இயக்கிய கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவியின் 33வது படம் உருவாக உள்ளது.
இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் நடிக்க உள்ளார்.
சமீபத்தில் நித்யா மேனன் அளித்த பேட்டியில் ஜெயம் ரவியின் 33 வது படத்தில் கமிட்டாகி இருப்பது குறித்து அவர் தெரிவித்துள்ளார்.
திருச்சிற்றம்பலம் ஷோபனா கதாபாத்திரத்தை போல் மீண்டும் ஒரு கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்,
அப்படிப்பட்ட ஒரு கேரக்டரில் தான் ஜெயம் ரவியின் 33வது படத்தில் நடிக்க போவதாகவும், ஆனால் இந்த கேரக்டர் அப்படியே ஷோபனா கேரக்டரை போலவே இருக்காது, அதைவிட இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த படம் ஓர் ரொமான்ஸ் காமெடி படம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
கிருத்திகா உதயநிதி கடைசியாக இயக்கிய பேப்பர் ராக்கெட் வெப் சீரிஸ் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதால் ஜெயம் ரவியின் 33வது படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் ஃபீட்பேக் கிடைத்துள்ளது.
கிருத்திகா உதயநிதி இயக்க உள்ள இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் தான் இந்த படத்திற்கான பூஜை நடந்து முடிந்தது.
‘திருச்சிற்றம்பலம்’ ஷோபனா கேரக்டரில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோயினாக உள்ள நித்யா மேனன், ஜெயம் ரவியின் 33வது படத்தின் மூலம் அந்த ஃபேவரைட் ஹீரோயின் அந்தஸ்தை தக்க வைத்து கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராம் சரண் – தோனி சந்திப்பு: ஸ்மார்ட் ஆன கேப்டன் கூல்!
பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம்: கூட்டணி முடிவுகள் வெளியாகுமா?