இந்தியா முழுவதும் சினிமா ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஜவான்’ படத்தின் முதல் பாடலான ‘வந்த எடம்’ இன்று (ஜூலை 31) வெளியாகியுள்ளது.
ஜவான் திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.
இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஜவான் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தநிலையில் ஜவான் படத்தின் முதல் பாடலான வந்த எடம் இன்று வெளியாகியுள்ளது. இந்த பாடலுக்குப் புகழ்பெற்ற நடன இயக்குநர் ஷோபி நடனம் அமைத்துள்ளார்.
பாடலாசிரியர் விவேக் எழுதிய வரிகளுடன், அனிருத்தின் சமீபத்திய வெற்றிகளின் வரிசையில் ‘வந்த இடம்’ பாடலும் ஜொலிக்கிறது.
‘வந்த எடம்’ பாடலின் படப்பிடிப்பு ஐந்து நாட்கள் நடந்துள்ளது. இந்தப் பாடல் இந்தியாவின் அனைத்து முன்னணி மொழிகளிலும் வெளியாகியுள்ளது , குறிப்பாக இந்தப் பாடல் தமிழில் ” வந்த எடம் ” என்றும், ஹிந்தியில் ” ஜிந்தா பந்தா” என்றும் மற்றும் தெலுங்கில் “தும்மே துலிபெளா ” என்றும் வெளியாகியுள்ளது. ஜவான் படத்தின் இந்த ரசனை மிகுந்த பாடலை கேட்கும் அனுபவத்தைத் தவறவிட்டு விடாதீர்கள்.
“வந்த எடம்” பாடல் குறித்து அனிருத் கூறுகையில், “ஜவானின் “வந்த எடம்’’ பாடல் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. இந்தப் படத்திற்காக நான் இசையமைத்த முதல் பாடல் இது. மேலும் நடிகர் ஷாருக்கானுக்கு நான் இசையமைப்பது இதுவே முதன்முறையாகும். அவர் எங்கள் தலைமுறையின் சின்னமாக விளங்குபவர். அவருடைய நட்சத்திர அந்தஸ்துக்கு நியாயம் செய்ய வேண்டுமென்பதில் நான் உறுதியாக இருந்தேன். இவ்வளவு திறமையான நடிகர்கள் மற்றும் குழுவினருடன் பணிபுரிவது உண்மையிலேயே மிக மகிழ்ச்சியாக இருந்தது.
இந்த பாடலை இவ்வளவு பெரிய அளவில் மிகப்பெரிய விஷுவல் விருந்தாக மாற்றியதில், அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு மிகப்பெரிது. இது ஒரு சவாலான மற்றும் ஆக்கப்பூர்வமான, நிறைவான பயணம். மூன்று மொழிகளில் இந்தப் படத்திற்கான ஆல்பத்தை உருவாக்கியது சிறந்த அனுபவம். ‘ஜவான்’ படத்தின் இசையை நான் ரசித்த அளவுக்கு மக்கள் கண்டிப்பாக ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
இராமானுஜம்
“கல்வி தான் நம்முடைய சொத்து” – மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!
டி. கே. சிவக்குமார் மீதான சிபிஐ வழக்கு : உச்ச நீதிமன்றம் மறுப்பு!
“எதிர்க்கட்சி தலைவரை நாடாளுமன்றத்தில் பாஜக பேசவிடுவதில்லை” – திருச்சி சிவா