புர்ஜ் கலிஃபாவில் ‘ஜவான்’ ட்ரெய்லர்: அட்லி நெகிழ்ச்சி!
துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவில் தான் இயக்கிய ‘ஜவான்’ படத்தின் ட்ரெய்லர் திரையிடப்பட்டது குறித்து இயக்குனர் அட்லி நெகிழ்ச்சி பதிவு ஒன்றை இன்று (செப்டம்பர் 1) தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருக்கும் அட்லி பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகி உள்ள திரைப்படம் ஜவான். இந்த படத்தில் நடிகர் ஷாருக்கான் நாயகனாகவும் நயன்தாரா நாயகியாகவும் நடித்துள்ளனர்.
விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது. மேலும் ஜவான் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த படம் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இச்சூழலில் தான், இந்தப்படத்தின் முன் வெளியீட்டு விழா கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்நிலையில், இப்படக்குழுவினர் முன்னோட்ட விழாவை முடித்த கையோடு துபாய் சென்றனர்.
அங்கு உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் ஜவான் படத்தின் ட்ரைலர் நேற்று (ஆகஸ்ட் 31) இரவு திரையிடப்பட்டது.
இந்த நிகழ்வில் நடிகர் ஷாருக்கான், இயக்குனர் அட்லி, அவரது மனைவி பிரியா, இசையமைப்பாளர் அனிருத் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், துபாய் புர்ஜ் கலிஃபாவில் தான் இயக்கிய ‘ஜவான்’ படத்தின் ட்ரெய்லர் திரையிடப்பட்டது குறித்து இயக்குனர் அட்லி நெகிழ்ச்சி பதிவு ஒன்றை இன்று (செப்டம்பர் 1) தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், இது மிகவும் மறக்க முடியாத இரவு இதை நான் கற்பனை கூட செய்யவில்லை. அற்புதங்கள் நடக்கும். உங்கள் அனைவருக்கும் நன்றி. நன்றி ஷாருக்கான் சார்” என்று கூறியுள்ளார்.
மேலும், இசையமைப்பாளர் அனிருத், ”துபாய்க்கு பலமுறை வந்திருக்கிறேன். இதே ரோட்டில் நடந்து சென்றிருக்கிறேன்.
ஆனால் தற்போது புர்ஜ் கலிஃபாவில் என் பெயரை பார்ப்பேன் என்று கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை.
இந்த தருணத்தை ஏற்படுத்தி தந்த ஷாருக்கானுக்கு மிக்க நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
சீமான் மீது புகார்: நீதிமன்றத்தில் விஜயலட்சுமி ஆஜர்!
என் மீது இன்னும் பல குற்றச்சாட்டுகள் வரும் – சீமான்