தனது நடிப்பில் வெளியாக உள்ள ஜவான் திரைப்படத்திற்கான ரிலீஸ் தேதியின் 30 நாள் கவுண்டவுன் போஸ்டரை இன்று (ஜூலை 7) வெளியிட்டுள்ளார் நடிகர் ஷாரூக்கான்.
கடந்த சில ஆண்டுகளாக தெலுங்கு, தமிழ், கன்னட திரையுலக படங்கள் பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டி வரும் நிலையில், பாலிவுட்டின் நிலைமையோ, ’இந்த பாலிவுட்டுக்கு என்னதான் ஆச்சு?’ என்று யோசிக்க வைத்தது.
இந்த நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளிவந்த ’பாலிவுட் பாட்ஷா’ என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ஷாரூக்கானின் பதான் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைத்தது. இதனால் ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகமும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தது.
அதனைத்தொடர்ந்து, பிரபல கோலிவுட் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ’ஜவான்’ திரைப்படத்தில் நடித்துள்ளார் ஷாரூக்கான்.
இதில், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, பிரியாமணி, சன்யா மல்ஹோத்ரா மற்றும் ரிதி டோக்ரா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் விஜய் மற்றும் சஞ்சய் தத் ஆகியோர் கேமியோவில் நடித்துள்ளதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
பதானைப் போலவே ஆக்சன் காட்சிகள் மிரட்டும் ஜவான் திரைப்படத்தின் டிரெய்லர் கடந்த 10ஆம் தேதி வெளியானது. அது யூடியுபில் 24 மணி நேரத்தில் 112 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்தது.
அதனைத் தொடர்ந்து வெளியான திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ’வந்த எடம்’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கடந்த 2 வாரங்களாக டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், ஷாரூக்கான் மொட்டை தலையுடன், கையில் துப்பாக்கி ஏந்தி நிற்கும் ஜவான் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
Main achha hoon ya bura hoon… 30 days to find out. Ready AH?#1MonthToJawan#Jawan releasing worldwide on 7th September 2023, in Hindi, Tamil & Telugu. pic.twitter.com/O47jh05lnj
— Shah Rukh Khan (@iamsrk) August 7, 2023
இதனை தனது எக்ஸ் பக்கத்தில், ’நான் ஹீரோவா? அல்லது வில்லனா? கண்டுபிடிக்க 30 நாட்கள் ஆகும்… தயாரா?’ என்று கேள்வியுடன் ஷாரூக்கான் வெளியிட்டுள்ளார்.
மேலும் ஜவான் திரைப்படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், 30 நாட்களுக்கான கவுண்டவுனை #1MonthToJawan என்ற ஹேஷ்டேக்குடன் போஸ்டரை பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து பாலிவுட் திரையுலக பிரபலங்கள் பலரும், ’நாங்கள் ரெடி’ என்று பதிலளித்து வருகின்றனர்.
ஏற்கெனவே படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படும் நிலையில், ஜவான் படக்குழுவினரும் அவ்வப்போது அப்டேட்டுகள் கொடுத்து வருவது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
அரசு பள்ளிக்காக கோடிக்கணக்கில் நிதி அளித்த அப்பள வியாபாரி
மீண்டும் மத்திய அரசிடமே அதிகாரம்: டெல்லி மசோதாவுக்கு திருச்சி சிவா எதிர்ப்பு!