ஜவான் படத்தின் முன் வெளியீட்டு விழா இன்று (ஆகஸ்ட் 30) சென்னையில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள நடிகர் ஷாருக்கான் தற்போது சென்னை வந்துள்ளார்.
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. நயன்தாரா, விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாகிறது.
இப்படத்துக்கான டிக்கெட் முன்பதிவு அமெரிக்கா, துபாய், ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை இயக்குநர் அட்லீயுடன் இணைந்து ஏற்கனவே ஷாருக்கான் பார்த்தார்.
இந்நிலையில், ‘ஜவான்’ படத்தின் முன் வெளியீட்டு விழா ( PreReleaseEvent) விழா இன்று (ஆகஸ்ட் 30) சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
https://twitter.com/srkworld321/status/1696831014843428910?s=20
இந்த விழாவில் ஏராளமான நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்கின்றனர். கல்லூரி மாணவர்கள், ரசிகர் மன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் நடிகர் சங்கத்தினர் முன்னிலையில் இன்னும் சற்று நேரத்தில் நிகழ்ச்சி தொடங்க உள்ளது.
இச்சூழலில், ‘ஜவான்’ படத்தில் மாறுபட்ட வேடங்களில் நடித்திருக்கும் ஷாருக்கான் இந்த பிரமாண்ட நிகழ்ச்சிக்காக மும்பையில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார்.
இந்த விழாவில் ஷாருக்கான் தவிர இயக்குனர் அட்லீ, விஜய் சேதுபதி உள்ளிட்ட மற்ற நடிகர்களும் படக்குழுவினரும் கலந்துகொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
எம்.ஜி.ஆர் படத்தை மறைப்பதா? – ஜெயக்குமார் காட்டம்!