தமிழ் திரைப்பட இயக்குநர்களில் 1000 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்த படத்தை இயக்கிய முதல் இயக்குநர் என்கிற சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார் இளம் இயக்குநர் அட்லி.
இவரது இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிப்பில் செப்டம்பர் 7ம் தேதி வெளியான படம் ‘ஜவான்‘.
இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் வெளியானது. இன்றைய அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி இப்படம் உலக அளவில் 1004 கோடி வசூலைப் பெற்றுள்ளது.
நேற்றைய ஞாயிறு உட்பட 18 நாட்களில் இந்தியாவில் இந்தி பதிப்பு மூலம் மட்டும் 505 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
மிகக் குறைந்த நாட்களில் 500 கோடி வசூலைக் கடந்த படம் என்ற புதிய சாதனையை இப்படம் படைத்துள்ளது. இதற்கு முன்பு இதே ஆண்டில் வெளிவந்த ஷாரூக்கான் நடித்த ‘பதான்’ படம் 28 நாட்களில் 500 கோடி வசூல் சாதனையைப் படைத்தது.
அதற்குப் பிறகு வெளிவந்த ‘கடார் 2’ இந்திப் படம் 24 நாட்களில் 500 கோடி வசூலித்து ‘பதான்’ சாதனையை முறியடித்தது. ஒரே வருடத்தில் ஷாரூக்கான் நடிப்பில் வெளியான இரண்டு படங்கள் 500 கோடி மொத்த வசூல் என்ற சாதனையைப் புரிந்துள்ளது.
இந்தியில் இந்த ஆண்டில் மட்டும் மூன்று படங்கள் 500 கோடி வசூலை கடந்துள்ளது இந்தி திரையுலகினருக்கு உற்சாகத்தையும், நம்பிக்கையையும் கொடுத்துள்ளது.
‘பாகுபலி 2’ படம் 34 நாட்களில் 500 கோடி ரூபாய் மொத்த வசூல் சாதனையை நிகழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இராமானுஜம்
இணையத்தை கலக்கும் பரினிதி சோப்ரா – ராகவ் சதா
பாஜகவுடன் கூட்டணி முறிவு : அதிமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
”அதிமுக – பாஜக கூட்டணி முறிவு துரதிர்ஷ்டவசமானது”: ஜி.கே.வாசன்
பாஜகவுடன் கூட்டணி இல்லை: அதிமுக மா.செ.க்கள் கூட்டத்தில் முடிவு!