ஜவான் திரைப்படத்தை நடிகர் அல்லு அர்ஜூன் பாராட்டியதற்கு ஷாருக்கான் நன்றி தெரிவித்துள்ளார்.
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு, தீபிகா படுகோன் நடித்த ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7-ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியானது. ஜவான் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். அந்தவகையில் நடிகர் அல்லு அர்ஜூன் ஜவான் படத்தை பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜவான் திரைப்படம் வெற்றியடைந்ததற்கு ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள். ஷாருக்கான் சார் இதுவரை இல்லாத மாஸான கதாபாத்திரத்தில் நடித்துள்ளீர்கள். இந்தியாவிற்கு அப்பாலும் உங்களது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை வசீகரித்துள்ளீர்கள். உங்களை நினைத்து உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன். உங்களுக்குகாக வேண்டுகிறேன். விஜய்சேதுபதி எப்போதும் போல உங்களது கதாபாத்திரத்தில் பயங்கரமாக நடித்துள்ளீர்கள். தீபிகா படுகோன் நேர்த்தியான, சிரமமற்ற, தாக்கத்தை ஏற்படுத்தும் நட்சத்திரமாக நடித்துள்ளார்.
நயன்தாரா தேசிய அளவில் பிரகாசமாக ஜொலிக்கிறார். அனிருத் இந்திய மக்கள் அனைவரையும் திரும்ப திரும்ப உங்கள் பாடல்களை கேட்க வைத்துள்ளீர்கள். நம் அனைவரையும் பெருமையடைய செய்த இயக்குநர் அட்லீக்கு பாராட்டுக்கள். சிந்தனையை தூண்டும் வணிக திரைப்படத்தை இயக்கி இந்திய பாக்ஸ் ஆபீசில் வரலாறு காணாத வெற்றியை படைத்துள்ளார்” என்று பாராட்டியுள்ளார்.
அல்லு அர்ஜூனுக்கு பதிலளித்த நடிகர் ஷாருக்கான், “உங்கள் அன்புக்கும் வேண்டுதலுக்கும் நன்றி. படத்தில் என்னுடைய நடிப்பை பாராட்டியதை என்னால் மறக்க முடியாது. ஜவான் கதாபாத்திரத்தை இப்போது மீண்டும் ஒருமுறை முறை உணர்கிறேன். நான் உங்களிடமிருந்து சில விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. புஷ்பா திரைப்படத்தை மூன்று நாட்களில் மூன்று முறை பார்த்தேன். விரைவில் வந்து உங்களுக்கு தனிப்பட்ட முறையில் ஒன்றை தருவேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
சென்னை: ஒப்புதல் பெறாத கட்டிடங்களுக்கு அனுமதி?
விநாயகர் சதுர்த்திக்கு ஊருக்கு போறீங்களா: அரசின் குட் நியூஸ்!