ஜவான் திரைப்படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வந்தாலும் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் முன்னேறி வருகிறது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய்சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி நடித்துள்ள ‘ஜவான்’ திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் ரூ.384.69 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
’ஜவான்’ திரைப்படம் வெளியான முதல் நாளில் இந்தி சினிமா வரலாற்றில் உலகம் முழுவதும் ரூ.129 கோடி வசூல் செய்த முதல் இந்திப்படம் என்று தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. கடந்த மூன்று நாட்களில் இப்படம் ரூ.384.69 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஜவான் இதுவரை ரூ.180 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் ரூ.20 கோடியை தாண்டி இப்படம் வசூலித்துள்ளது. ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் ரூ.24 கோடி, கர்நாடகாவில் ரூ.20 கோடி, கேரளாவில் ரூ.7.55 கோடி வசூலித்துள்ளதாக விநியோக வட்டாரங்களில் கூறப்படுகிறது. வார இறுதிநாளான நேற்று ஜவான் படம் திரையிட்டுள்ள திரையரங்குகளில் கூட்டம் அலைமோதியதால் 500 கோடி ரூபாய் மொத்த வசூலை கடந்திருக்கும் என கூறப்படுகிறது.
இராமானுஜம்
வேர்டுபேட் முற்றிலுமாக நீக்கப்படும்: மைக்ரோசாஃப்ட் சொல்லும் காரணம்!
ஜி-20 மாநாடு தீர்மானத்துக்கு இடையில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்!