ஜவான் 2வது சிங்கிள்: காதலில் உருகும் ஷாருக்கான் – நயன் தாரா

Published On:

| By christopher

jawan 2nd single released tomorrow

ஜவான் படத்தின் இரண்டாம் சிங்கிள் நாளை (ஆகஸ்ட் 14) வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அட்லி இயக்கத்தில்  ஷாருக்கான் நடிப்பில் தயாராகி வரும் படம் ‘ஜவான்’. தீபிகா படுகோன், நயன்தாரா, பிரியாமணி, விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.  செப்டம்பர் 7ஆம் தேதி அன்று இந்தி,தமிழ்,தெலுங்கு, ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் சிங்கிள் ‘வந்த எடம்’ ரிலீசாகி யூடியுபில் பல கோடி பார்வைகளை பெற்று சாதனை படைத்தது.

இந்த நிலையில் ஜவான் படத்தின் இரண்டாம் சிங்கிள் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது ஷாருக்கான், நயன்தாரா இடையில் உள்ள காதல் பாடலாக இருக்கும் இருக்கும் என்று ப்ரொமோ வீடியோவில் தெரிகிறது.

இந்தியில் (சல்லியா), தமிழில் (ஹையோடா),தெலுங்கில் (சலோனா) என இந்த பாடலுக்கு தலைப்பு வைத்துள்ளனர்.  வருகின்ற ஆகஸ்ட் 14ம் தேதி இப்பாடல் வெளியாகிறது.

இராமானுஜம்

நாங்குநேரி விவகாரத்தில் விரைவில் அறிக்கை: எஸ்.சி/எஸ்.டி ஆணையம்

நாங்குநேரி சம்பவம்… உதயநிதியை கைது செய்யவேண்டும் : கிருஷ்ண சாமி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share