அதிரடி ஆக்க்ஷன் படங்களில் நடிப்பது திரைக்கலைஞர்களுக்கு விருப்பமான ஒன்று.
2007 ஆம் ஆண்டு வெளியான பில்லா படத்தில் துப்பாக்கி ஏந்திய நயன்தாராவை தமிழ் ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. அதன் பின் அவர் நாயகியாக நடித்த படங்களில் எல்லாம் அவரது கிளாமர் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டாலும், கதைநாயகியாக அவர் நடிப்பில் வெளியான படங்கள் நயன்தாராவை மிகச்சிறந்த நடிப்பாற்றல்மிக்க நடிகையாக ரசிகர்கள் மத்தியில் பதிய செய்தது.
இந்நிலையில், நயன்தாரா திருமணத்துக்கு பின் இந்தியில்”அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் ஜோடியாக நடித்திருக்கும் படம் ஜவான்.
இதில் விஜய் சேதுபதி பிரியாமணி, யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ளனர். தீபிகா படுகோன் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் செப்டம்பர் 7ஆம்தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் நயன்தாராவின் தோற்றத்தை ஷாருக்கான் நேற்று வெளியிட்டுள்ளார்.
அந்த படத்திற்குகேப்ஷனாக ‘புயலுக்கு முன் வரும் இடி அவள்’ என்று குறிப்பிட்டுள்ளார். அந்த தோற்றம் ஜவான் படத்தில்அவர் போலீஸ் வேடத்தில் நடிப்பதை உறுதி செய்வதாக இருக்கிறது.
இராமானுஜம்