கார்த்தி இல்லாத ஜப்பான் படத்தின் செகண்ட் சிங்கிள்!

சினிமா

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ள படம் ஜப்பான். இந்த படத்தில் நடிகர் கார்த்தி மிகப்பெரிய கொள்ளைக்காரன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர்கள் அனு இமானுவேல், கே.எஸ்.ரவிக்குமார், விஜய் மில்டன், சுனில் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜப்பான் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ஜப்பான் படம் நடிகர் கார்த்தியின் 25வது படம் என்பதால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஜப்பான் படத்தின் புரோமோஷன்களில் ஒரு பகுதியாக கார்த்தி 25 கொண்டாட்ட நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை நடிகர் கார்த்தியுடன் பணியாற்றிய இயக்குனர்கள், நடிகர்கள், நண்பர்கள், என பலரும் கலந்துக் கொண்டனர்.

சமீபத்தில் வெளியான ஜப்பான் படத்தின் Touching Touching என்ற ஃபர்ஸ்ட் சிங்கிளும் மற்றும் ஜப்பான் படத்தின் ட்ரெய்லரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் Touching Touching பாடலை நடிகர் கார்த்தி அவர்களே பாடியிருந்தார்.

இந்நிலையில், இன்று (நவம்பர் 01 ஆம் தேதி) ஜப்பான் படத்தின் செகண்ட் சிங்கிள் “சொட்டாங்கல்லா” என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலுக்கு பிரபல பாடலாசிரியர் யுகபாரதி வரிகள் எழுதியுள்ளார், பிரபல இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இந்த பாடலை பாடியுள்ளார்.

“சொட்டாங்கல்லா” லிரிக்ஸ் வீடியோவில் நடிகர் கார்த்தி இடம்பெறவில்லை. அநேகமாக இந்த பாடல் பிளாஷ்பேக் காட்சியில் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கு: ஆவணங்கள் ஒப்படைப்பு!

அனுமதியின்றி கொடி ஏற்ற முயன்ற பாஜகவினர் கைது!

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *