கார்த்தியின் ‘ஜப்பான்’ ஓடிடி ரிலீஸ் எப்போது?

சினிமா

கார்த்தி, அணு இமானுவேல், தெலுங்கு நடிகர் சுனில், விஜய் மில்டன், ஜித்தன் ரமேஷ் உள்ளிட்டோர் நடிப்பில், ஜோக்கர், குக்கூ, ஜிப்ஸி உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கத்தில் தயாரான படம் ‘ஜப்பான்’.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ராகவா லாரன்ஸ் – எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாரான ‘ஜிகர்தண்டா டபிள் X’ படத்திற்கு போட்டியாக, இப்படம் நவம்பர் 10 அன்று திரையில் வெளியானது.

பெயர் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே இந்த திரைப்படதிற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மிகுந்திருந்த நிலையில், விறுவிறுப்பான டீசர் மற்றும் ட்ரைலர், அந்த எதிர்பார்ப்பை எகிற செய்தது. ஒரு மிகப்பெரிய நகைக்கடையில் நிகழ்த்தப்பட்ட திருட்டை மையமாக வைத்து, ஆக்சன், காமெடியுடன் தயாரான இப்படம், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாமல் கலவையான விமர்சனங்களுக்கு உள்ளானது. அதன் காரணமாக வசூலிலும், பெரும் பின்னடைவை சந்தித்தது.

இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, கார்த்தி நடிப்பில் தயாராகியுள்ள ‘ஜப்பான்’ திரைப்படம் வரும் டிசம்பர் 11 அன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இது குறித்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ட்வீட்டில், இப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என 4 மொழிகளில் வெளியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

முரளி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பங்குச்சந்தை இமாலய உயர்வு: ஒரே நாளில் ரூ.5.77 லட்சம் கோடி லாபம்!

நிவாரணப் பணி: அமைச்சர்கள் நியமனம்!

 

+1
0
+1
4
+1
0
+1
2
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *