Japan Jigarthanda 2 movie special screening

ஜப்பான், ஜிகர்தண்டா 2 – சிறப்பு காட்சிக்கு அனுமதி!

சினிமா

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் சித்தார்த் மற்றும் நடிகர் பாபி சிம்ஹா நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் ஜிகர்தண்டா. Japan Jigarthanda 2 movie special screening

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமாக “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

இந்த படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 10 ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது.

“தமிழ் சினிமாவின் முதல் கருப்பு ஹீரோ” என்ற வசனத்துடன் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை தமிழ்நாடு முழுவதும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. மேலும் தமிழ் சாட்டிலைட் உரிமை சன் தொலைக்காட்சி நிறுவனம் வாங்கியுள்ளது.

இந்நிலையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் சிறப்பு காட்சிக்கு  தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து வெளியான அரசு உத்தரவின் படி, நவம்பர் 10 ஆம் தேதி முதல் 15-ம் தேதி வரை ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இதன்படி மேற்கண்ட நாட்களில் படத்தின் முதல் காட்சி காலை 9 மணி தொடங்கி நள்ளிரவு 1.30 மணிக்குள் அனைத்து காட்சிகளையும் முடித்து கொள்ள வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே உத்தரவு நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 10ஆம் தேதி வெளியாக உள்ள ஜப்பான் படத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.

ஜப்பான் படத்தின் தயாரிப்பு நிறுவனம் நவம்பர் 10ஆம் தேதி முதல் நவம்பர் 20ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு சிறப்புக் காட்சிகள் திரையிட அனுமதி கோரிய நிலையில் ஜிகர்தண்டா 2 படத்திற்கு வழங்கப்பட்டது போலவே,

நவம்பர் 10ஆம் தேதி முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மட்டுமே ஜப்பான் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தின் சிறப்பு காட்சிக்கும் இதே காட்சி நேரங்கள் தான் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. Japan Jigarthanda 2 movie special screening

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Bigg Boss 7 Day 38 : அம்பலமான நிக்‌சனின் ஆபாச கமெண்ட் – ஒன்னும் செய்யாத ‘பிக் பாஸ் ஃபெமினிஸ்ட்ஸ்’!

பொங்கல் ரேசில் ‘கேப்டன் மில்லர்’!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *