நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து பல நல்ல படங்களை தயாரித்து வருகின்றனர். இவர்கள் தயாரித்த கூழாங்கல் திரைப்படம் சர்வதேச அளவில் பல விருதுகளை வென்றது.
இந்நிலையில் தற்போது ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலமாக ஜல்லிக்கட்டை மையமாக கொண்டு ஒரு ஆவணப் படத்தை தயாரித்துள்ளனர். ‘வேர்கள்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தை நிஷாந்த் பியோ இயக்கியுள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வேர்கள் ஆவணப் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. “An Original Jallikattu Documentary Feature” என்று டீசரில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இந்த ஆவணப்படம் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
”வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது” : ஆளுநருக்கு ஸ்டாலின் பதிலடி!
இரு வேடங்களில் மிரட்டும் சூர்யா… கங்குவா புது போஸ்டர் இதோ!