ஜெயிலர் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இன்று (ஆகஸ்ட் 9) காலை நடிகர் ரஜினிகாந்த் இமயமலை புறப்பட்டுச் சென்றார்.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அவருடன் இணைந்து கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் , ஜாக்கி ஷெரப், யோகி பாபு நடிகை ரம்யா கிருஷ்ணன், தமன்னா ஆகியோர் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் நாளை (ஆகஸ்ட் 10) திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை இமயமலைக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 4 ஆண்டுகளுக்கு பிறகு இமயமலை செல்வதாகவும், ஜெயிலர் படம் எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் பார்த்துவிட்டு சொல்லுங்கள் எனவும் கூறினார்.
முன்னதாக நடிகர் ரஜினி கடந்த மாதம் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்