ஜெயிலர் ரிலீஸ்: ஊழியர்களுக்கு ட்ரீட் கொடுத்த நிறுவனம்!

Published On:

| By Selvam

jailer movie release private company holiday

அரசியல், சினிமா இரண்டிலும் புகழின் உச்சத்தில் இருப்பவர்களுடன் ஏதாவதொரு வகையில் தங்களை தொடர்புபடுத்தி தங்களை பிரபலப்படுத்திக்கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது.

அந்தவகையில் தனியார் நிறுவனம் ஒன்று நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவர உள்ள ஜெயிலர் படத்தினை பார்ப்பதற்காக இலவசமாக டிக்கெட் வழங்கி ஒரு நாள் தனது ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்துக்கு ரஜினிகாந்த் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், தமிழகம் மற்றும் பெங்களூருவில் 8 கிளைகளைக் கொண்ட Uno Aqua Care நிறுவனம் ‘ஜெயிலர்’ படத்தை தனது ஊழியர்கள் பார்க்கும் வகையில் 10-ம் தேதி விடுமுறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ரஜினிகாந்தின் ’ஜெயிலர்’ படம் வெளியாக உள்ள நிலையில் இந்தப் படத்திற்காக விடுமுறை வேண்டும் என எங்களது HR டிபார்ட்மெண்டுக்கு விடுப்பு விண்ணப்பங்கள் வருவதைத் தடுக்கும் வகையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்க முடிவெடுத்துள்ளோம்.

மேலும், பைரஸியை தடுக்கும் வகையில் பணியாளர்களுக்கு படத்தின் டிக்கெட்டுகளை இலவசமாக வழங்குகிறோம். இது எங்கள் நிறுவனத்தின் சென்னை, பெங்களூர், திருச்சி, திருநெல்வேலி, செங்கல்பட்டு, மதுரை மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் மற்றும் அழகப்பன் நகரில் உள்ள அனைத்து கிளைகளுக்கும் பொருந்தும். நம் தாத்தாவுக்கும், நம் அப்பாவுக்கும், நமக்கும், நம் பிள்ளைகள் மற்றும் பேரன்களுக்கும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்’ என்று குறிப்பிட்டதோடு ‘ரஜினிகாந்த் வாழ்க’ என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராமானுஜம்

அண்ணாமலை நடைபயணத்திற்கு விஜய் மக்கள் இயக்கம் ஆதரவா? – புஸ்ஸி ஆனந்த் விளக்கம்!

குப்பை மேட்டில் மருத்துவக் கழிவுகள்: டிரைவர்கள் தப்பியோட்டம்!

சென்னையில் களைகட்டிய கலைஞர் மாரத்தான்: 73 ஆயிரம் பேர் பங்கேற்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share