ஜெயிலர் இசை வெளியீட்டு விழா: அப்டேட் கொடுத்த படக்குழு!

Published On:

| By Selvam

jailer movie music audio launch

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28-ஆம் தேதி நடைபெறும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

பீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா, பிரியங்கா மோகன், மோகன்லால் உள்ளிட்டோர் நடிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திலிருந்து காவாலா, Hukum ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் காவாலா பாடலுக்கு பலரும் ரீல்ஸ் வெளியிட்டு வருகின்றனர். ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்தநிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28-ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்று படக்குழு இன்று (ஜூலை 22) அறிவித்துள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் அவரது பேச்சை கேட்க ஆர்வமாக உள்ளனர். முன்னதாக பேட்ட, தர்பார் படங்களில் ரஜினி ரசிகர்களுக்கு அனிருத் இசை விருந்து அளித்திருந்தார். இதனால் ஜெயிலர் படத்தின் ஆல்பத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

செல்வம்

அதிரடியாய் குறைந்த தங்கம் விலை!

“மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் விவாதிக்க விரும்பவில்லை” – ஸ்மிருதி இராணி