ஜெயிலர் படத்தின் ஜுஜுபி பாடல் வெளியானது!
’காவாலா’, ‘ஹுக்கும்’ பாடல்களைத் தொடர்ந்து ‘ஜெயிலர்’ படத்தின் மூன்றாவது பாடலான ‘ஜுஜுபி’ பாடல் இன்று (ஜூலை 26) வெளியிடப்பட்டுள்ளது.
பீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா, பிரியங்கா மோகன், மோகன்லால் , ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்திலிருந்து காவாலா, ஹுக்கும் ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் காவாலா பாடலுக்கு பலரும் ரீல்ஸ் வெளியிட்டு வருகின்றனர். ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாக உள்ளது.
https://twitter.com/sunpictures/status/1684180404872568832?s=20
இந்நிலையில், இன்று (ஜூலை 26) மூன்றாவது பாடலான ‘ஜுஜுபி’ லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பாடலை பாடகி தீ, இசையமைப்பாளர் அனிருத் மற்றும் அனந்த கிருஷ்ணன் ஆகியோர் பாடியுள்ளனர். சூப்பர் சுப்பு பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வருகிற ஜூலை 28 ஆம் தேதி 4 மணிக்கு நடைபெற உள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
“விவசாயிகளிடம், என்.எல்.சி நிர்வாகம் அத்துமீறினால்…” : வேல்முருகன் கண்டனம்!
திமுக ஃபைல்ஸ் 2 – ரூ.5600 கோடி ஊழல் : ஆளுநரை சந்தித்த அண்ணாமலை