ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்!

Published On:

| By Monisha

ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ வரும் ஜூலை 6 ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு இன்று (ஜூலை 3) அறிவித்துள்ளது.

இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருப்பதாக அவரது பிறந்தநாளன்று படக்குழு அறிவித்திருந்தது.

தொடர்ந்து ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் படத்திற்கான புரோமோஷன் வேலைகளைப் படக்குழு தொடங்கியுள்ளது.

https://twitter.com/sunpictures/status/1675862718954496000?s=20

அதன்படி ஜெயிலர் படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ வரும் ஜூலை 6 ஆம் தேதி வெளியாகும் என்று புரோமோ வீடியோ வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயிலர் படத்தின் அப்டேட் ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மோனிஷா

கடற்கரையில் வாலிபால் ஆடிய இந்திய அணி கிரிக்கெட் வீரர்கள்!

முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ் எப்போது? அப்பல்லோ

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share