ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ லிரிக்கல் வீடியோ இன்று (ஜூலை 6) மாலை வெளியாகியுள்ளது.
இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருப்பதாக அவரது பிறந்தநாளன்று படக்குழு அறிவித்திருந்தது.
தொடர்ந்து ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் படத்திற்கான புரோமோஷன் வேலைகளைப் படக்குழு தொடங்கியுள்ளது.
அதன்படி ஜெயிலர் படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ இன்று வெளியாகியுள்ளது. இந்த பாடல் முழுவதும் தமன்னாவிற்காக எழுதப்பட்டுள்ளது என்பதை பாடல் உணர்த்துகிறது.
தமிழ் தெலுங்கு கலந்து அருண்ராஜா பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்த பாடலை பாடகி ஷில்பா ராவ் பாடியுள்ளார். பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு காவாலா பாடல் படமாக்கப்பட்டுள்ளது.
காவாலா பாடல் வெளியான 1 மணி நேரத்தில் 10 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
மோனிஷா
Comments are closed.