சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து இந்த படம் உருவாகி உள்ளது. ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் ரூ.375 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகத் தயாரிப்பு நிறுவனம் முதல் வார முடிவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தமிழ் சினிமா பாக்ஸ்ஆபீஸ் வரலாற்றில் இது ஒரு புதிய சாதனை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சன்பிக்சர்ஸ் தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அதாவது இந்திய மதிப்பில் 41.57 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக ’லாஸ் வேகாஸ் பாக்ஸ் ஆஃபிஸ்’ அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையொட்டி இந்த தகவலை லாஸ் வேகாஸில் விளம்பர பலகையில் வெளியிட்டுள்ள வீடியோவையும் சன் பிக்சர்ஸ் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் திரையரங்குகள் மூலம் ஜெயிலர் படத்திற்கு இதுவரை கிடைத்துள்ள மொத்த வசூலில் 50% அமெரிக்க பாக்ஸ் ஆபீசில் ஜெயிலர் வசூல் செய்திருப்பது வரலாற்று சாதனையாகவே திரைப்பட வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இராமானுஜம்
’பிளேயிங் லெவனை தேர்வு செய்வது பெரும் தலைவலி’- பும்ரா
FIFA Worldcup: 2010 சம்பவத்தை பிரதிபலித்த ஸ்பெயின் மகளிர் அணி!
’அதிமுக மாநாடு தோல்வியை தழுவியுள்ளது’: பன்னீர் விமர்சனம்!