ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் உலக அளவில் 375.40 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படம் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, ஜாக்கி ஷெராப்,ஷிவ ராஜ்குமார், மோகன்லால், சுனில், விநாயகன், வசந்த்ரவி,யோகி பாபு, மிர்னா என பலர் நடித்துள்ளனர்.
தென்னிந்தியாவில் பிரபல நடிகர்களான மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஆகியோர் ஜெயிலர் படத்தில் நடித்திருப்பது படத்திற்கான கூடுதல் பலமாக அமைந்தது. இதனால் ஜெயிலர் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
https://twitter.com/sunpictures/status/1692076584478396489?s=20
ஜெயிலர் திரைப்படம் வெளியாகி ஒரு வாரமான நிலையில் படத்தின் வசூல் எவ்வளவு என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
முதல் வார முடிவில் உலகம் முழுவதும் ஜெயிலர் படம் ரூ.375.40 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த வருடம் வெளியான தமிழ் படங்களில் குறுகிய காலத்தில் அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமையையும் ஜெயிலர் படைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் வெளியான ரஜினிகாந்த் படங்கள் செய்யாத வசூல் சாதனையையும் ஜெயிலர் செய்துள்ளது.
மோனிஷா
Comments are closed.