தமிழ் சினிமா ரசிகர்களும், திரையரங்க உரிமையாளர்களும் பெரிதும் எதிர்பார்த்த ஜெயிலர் திரைப்படம் உலக அளவில் ரூ.150 கோடி வசூலைக் கடந்துள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
படம் பற்றி எதிர்மறையான விமர்சனங்கள் வெளியானபோதும் முதல் நாள் உலகம் முழுவதும் ரஜினிகாந்த் ரசிகர்கள் அதிகபட்ச விலைக்கு டிக்கெட் வாங்கி தனது மானசீக நடிகர் நடித்த படத்தின் மொத்த வசூல் அதிகரிக்க அடித்தளமிட்டுள்ளனர்.
நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 10) வெளியான இப்படம் முதல் நாளில் இந்தியா முழுவதும் ரூ.52 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது.
இதில் தமிழகத்தில் முதல் நாள் ரூ.24கோடி ரூபாய் மொத்த வசூல் செய்த இப்படம், இரண்டாம் நாள் 14 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளது.
இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.150 கோடி மொத்த வசூலை கடந்திருக்கிறது.
மேலும் கடந்த ஆண்டு வெளியான கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் அமெரிக்காவில் மொத்தமாக 2.5 மில்லியன் டாலர் வசூல் செய்திருந்தது.
இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஜெயிலர் அமெரிக்காவில் 2வது நாளிலேயே 2.8 மில்லியன் டாலர் வரை வசூல் செய்து விக்ரமின் வாழ்நாள் வசூல் சாதனையை முறியடித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனையடுத்து ஜெயிலர் படம் மேலும் பல வசூல் சாதனைகளை நிகழ்த்துமா என்பது திங்கட்கிழமை ஆகும் மொத்த வசூலை வைத்தே முடிவுக்கு வர முடியும் என்கின்றனர் திரையரங்க உரிமையாளர்கள்.
இராமானுஜம்
நாங்குநேரி சம்பவம் எதிரொலி: பள்ளி மாணவர்களுக்காக முதல்வர் உத்தரவு!
அன்பில் மகேஷ்க்கு நெஞ்சு வலி… விமானத்தில் வர சொன்ன முதல்வர்… நடந்தது என்ன?