ஜெயிலர் பட நடிகர் கைது!

Published On:

| By Kavi

Jailer actor Vinayakan arrested

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி  ஹிட் அடித்த படம் ஜெயிலர். இந்த படத்தில் நடிகர் ரஜினிக்கு வில்லனாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மலையாள நடிகர் விநாயகன்.

ஜெயிலர் படத்தில் வர்மன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததால் சமூக வலைதளங்களில் நடிகர் விநாயகனுக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது.

இந்நிலையில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நடிகர் விநாயகன்  உள்ளூர் காவல்துறை அதிகாரிகளுடன் தகராறில் ஈடுபட்டதால்   கைது செய்யப்பட்டுள்ளார்.

தகராறில் ஈடுபட்ட போது அவர் மது அருந்தி இருந்தார் என்றும், அதனை உறுதி செய்ய காவல்துறை அதிகாரிகள் நடிகர் விநாயகனை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றுள்ளார்கள்.

ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விநாயகன் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாக உள்ள துருவ நட்சத்திரம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

அந்த படத்தின் ட்ரெய்லர் இன்று (அக்டோபர் 24) மாலை 5 மணிக்கு தான் வெளியானது. மீண்டும் நடிகர் விநாயகனின் அற்புதமான நடிப்பை திரையில் பார்க்க காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு தற்போது அவர் கைதாகி உள்ள செய்தி அதிர்ச்சி அளித்துள்ளது.

– கார்த்திக் ராஜா

சிங்கப்பூர் செல்லும் ஓ.பன்னீர்: மெடிக்கலா, பொலிடிக்கலா?

டிஜிட்டல் திண்ணை: சிறையில் செந்தில்பாலாஜியுடன் சந்திப்பா? கௌதமியை ஏமாற்றிய அழகப்பனுக்கு உதவினாரா? அமர் பிரசாத்துக்கு அதிகரிக்கும் நெருக்கடி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel