ஜெய் நடிப்பில் ‘தீராக் காதல்’

Published On:

| By Kavi

தமிழ்த்திரையுலகத்தின் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘பொன்னியின் செல்வன் 2’, ‘இந்தியன் 2’, ‘லால் சலாம்’, ‘ரஜினி 170’ ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகின்றன.

இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் புதியபடம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘அதே கண்கள்’, ‘பெட்ரோமாக்ஸ்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘தீராக் காதல்’. இந்தத் திரைப்படத்தில் நடிகர் ஜெய், நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ், ஷிவதா, பேபி வ்ரித்தி விஷால், அப்துல் லீ, அம்ஜத் கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் கதை மற்றும் திரைக்கதையை இயக்குநர் ரோகின் வெங்கடேசன் மற்றும் ஜி.ஆர்.சுரேந்தர்நாத் ஆகியோர் இணைந்து எழுதியிருக்கிறார்கள். ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்திருக்கிறார்.

கலை இயக்கத்தை ராமு தங்கராஜ் கவனிக்க, படத்தொகுப்புப் பணிகளை பிரசன்னா ஜி.கே. மேற்கொண்டிருக்கிறார். இந்தத் திரைப்படத்திற்கு ஜி.ஆர்.சுரேந்தர்நாத் வசனம் எழுத, டி.உதயக்குமார் ஒலி வடிவமைப்பாளராகப் பணியாற்றியிருக்கிறார்.

ரொமான்டிக் ட்ராமா ஜானரில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் முடிந்து விரைவில் திரைக்கு வரத் தயாராக இருக்கிறது.

இந்நிலையில் மார்ச் 24 அன்று படத்தின் முதல்பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் தலைப்பும், தோற்றமும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

இராமானுஜம்

கடலின் குரலோடு மோடியின் மனதின் குரல்!

விடிகே2 வருமா?: ‘பத்து தல’ விழாவில் சிம்பு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel