தமிழின் முன்னணி நடிகர் சூர்யா ‘கங்குவா’ படத்திற்கு பிறகு வரிசையாக அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் ‘புறநானூறு’, வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ என சூர்யா நடிப்பில் வித்தியாசமான படங்கள் உருவாகவுள்ளன.
இதற்கிடையில் ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்ஷன் படமொன்றில் நடிக்கவும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. மறுபுறம் ‘வேள்பாரி’ படத்திலும் சூர்யா நடிக்கவிருப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில் சூர்யா பாலிவுட் இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் இயக்கத்தில், ‘கர்ணா’ என்னும் பிரமாண்ட படத்தில் நடிக்க இருக்கிறார். மகாபாரதத்தில் வரும் கர்ணன் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு, இப்படம் பான் இந்தியா படமாக உருவாகிறது.
இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தில் சூர்யா கர்ணனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஸ்ரீதேவி மகளும், பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை ஜான்வியின் தந்தையும், தயாரிப்பாளருமான போனி கபூர் சமீபத்திய பேட்டியொன்றில் உறுதி செய்துள்ளார்.
இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படம் ரூபாய் 5௦௦ கோடி பட்ஜெட்டில் உருவாகிறதாம். இந்த தகவல்கள் தற்போது உறுதியாகி விட்டதால் விரைவில் ‘கர்ணா’ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோடி செல்ஃபி பாயின்ட் இங்க வைக்கலாமே? அப்டேட் குமாரு
தமிழக பட்ஜெட்டில் வளர்ச்சி திட்டங்கள் இல்லை: எதிர்க்கட்சிகள் விமர்சனம்!