44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் ஜூலை 28 ஆம் தேதி தொடங்கியது. இதன் நிறைவு விழா நேற்று (ஆகஸ்ட் 9 ) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
அனைவரையும் கவரும் படி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரேங்கேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , செஸ் ஒலிம்பியாட் தலைவர் அகர்டி துவார்கோவிச், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த நிகழ்ச்சி தொடர்பாக பலருக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில், “இசைப் புயல் ஏ.ஆர் ரஹ்மான், உலக நாயகன் கமல்ஹாசன், இயக்குனர் விக்னேஷ் சிவன், தமிழ்நாடு காவல்துறையினர் மற்றும் குறுகிய காலத்தில் இந்த உலகளாவிய நிகழ்வுக்கு தங்கள் கடின உழைப்பு, ஆதரவு, ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் பாராட்டுக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வரின் பதிவை இயக்குனர் விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார் . “இது ஒரு பெருமையான தருணம், பிரபஞ்சத்திற்கு நன்றி” என கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
சிறுவனின் பிங்கி ப்ராமிஷை காப்பாற்றிய ரோஜர் ஃபெடரர்: அப்படி என்ன செய்தார்?