#IStandByDhanush…டிரெண்டாகும் ஹேஸ்டேக்… நயனுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

Published On:

| By Kumaresan M

நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவருக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மிகவும் கோலாகலமாக நடைபெற்ற இந்த திருமண ஆவணப்படம் நெட்பிலிக்ஸ் OTT தளத்தில் இன்று (நவம்பர் 18) வெளியானது.

இந்த ஆவணப்படத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கூட்டணியில் வெளியான நானும் ரவுடி தான் திரைப்பட பாடல் காட்சிகளை பயன்படுத்தி இருந்தனர். அதனை பயன்படுத்தியதற்காக இப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் பத்து கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதன் காரணமாக இருவருக்குள்ளும் மோதல் வெடித்துள்ளது. நயன்தாரா மிகவும் காட்டமாக அந்த அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றார். ஆனால், இப்போது வரை தனுஷ் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இந்த விவகாரத்தில்  பல நடிகைககள் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால், ரசிகர்கள் பலர் நயன்தாராவுக்கு எதிர்ப்பாக உள்ளனர்.

இவர்கள் #IStandByDhanush  என்ற ஹேஸ்டேக்கை சோசியல் மீடியாவில் டிரெண்ட் செய்துள்ளனர். அதில், “நயன்தாரா தனது திருமணத்தை கூட பணமாக்க ஆசைப்படுகிறார். நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து கோடிக்கணக்கான பணத்தை பெறும் நயன்தாரா தனுஷிடத்தில் இருந்து இலவசமாக கிளிப்பிங்கை கேட்பது எந்த விதத்தில் நியாயம்?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கிடையே, எஸ்.எஸ்.குமரன் என்ற  படத் தயாரிப்பாளர் LIC என்ற தலைப்பை என் நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்துள்ளார். இந்த தலைப்பை விக்னேஷ் சிவன் தன் மேலாளர் மூலம் கேட்டுள்ளார். அவர் கொடுக்காத நிலையிலும், அதே தலைப்பை விக்னேஷ் சிவன் பயன்படுத்தி வந்துள்ளார். இந்த விவகாரத்திலும் ரசிகர்கள் நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 பற்றி எரியும் மணிப்பூர்: கலவரத்தில் 20 பேர் பலி!

மூன்று நாட்களில் இத்தனை கோடியா? – பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் ‘கங்குவா’

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share