நடிகர் தனுஷும், ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
தொடர்ந்து, தனுஷின் நடிப்பை மெருகேற்றியதில் ஐஸ்வர்யாவுக்கு முக்கிய பங்கு உண்டு. நடை, உடை, பாவனை, பேசும் விதம் என பலவற்றையும் மெருகேற்றினார். அதேபோல் இயக்குநராக வேண்டும் என்ற தனது மனைவியின் ஆசையை உணர்ந்துகொண்டு ஐஸ்வர்யா இயக்கிய படங்களில் ஹீரோவாகவும், வை ராஜா வை படத்தில் சிறப்பு தோற்றத்திலும் தனுஷ் நடித்தார்.
சுமூகமாக போய்க்கொண்டிருந்த இந்த தம்பதியின் திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். எனினும், விவாகரத்து கோரி அவர்கள் நீதிமன்றத்துக்கு செல்லாமல் இருந்ததால், மீண்டும் அவர்கள் சேர்வதற்கு வாய்ப்புகள் இருந்ததாக கருதப்பட்டது.
நடிகர் ரஜினிகாந்தும் இருவரையும் சேர்த்து வைக்க முயன்றதாக கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில் இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் சட்டப்படி விவாகரத்து கேட்டு மனுவை தாக்கல் செய்தார்கள்.
அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த முறையும் ஆஜராகமாட்டார்கள் என்று கருதிய நிலையில். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விசாரணைக்கு ஆஜரானார். தனுசும் ஆஜரானார். விசாரணையில், இருவரும் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கூறியதாக தெரிகிறது. இதனால், இருவரும் விவாகரத்து பெறுவது உறுதிதான் என்று சொல்லப்படுகிறது. வரும் நவம்பர் 27 ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
56 ஆண்டு காலத்தில் எந்த இந்திய பிரதமரும் போனது கிடையாது… அங்கேயும் லேண்ட் ஆயிட்டார் மோடி