பழைய வண்ணாரப்பேட்டை, ‘திரெளபதி’, ‘பகாசூரன்’ போன்ற படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’.
இந்த படத்தில் நடிகர் அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்தார்.
சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படம் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இதைத்தொடர்ந்து, மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
இதனிடையே, நடிகர் ரிச்சர்ட் ரிஷி சில தினங்களுக்கு முன்பு நடிகை யாஷிகாவுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் ரிச்சர்ட் ரிஷியும் யாஷிகாவும் காதலித்து வருகின்றனர்..விரைவில் திருமணம் செய்ய உள்ளனர் என்பது போன்ற கருத்துகளை ட்ரெண்ட் செய்தனர்.
இந்த நிலையில் இது குறித்து ரிச்சர்ட் ரிஷியே விளக்கம் ஒன்றை கொடுத்து இருக்கிறார்.
விகடனுக்கு அவர் அளித்த பேட்டியில், “நானும் யாஷிகாவும் நடிக்கும் ‘சில நொடிகளில்’ படத்தின் புகைப்படங்களைத்தான் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்தேன். இப்படத்தினை, கன்னட இயக்குநர் வினய் பரத்வாஜ் இயக்குகிறார்.
‘ஜீன்ஸ்’, ‘தாம் தூம்’, ‘கோச்சடையான்’ படங்களை தயாரித்த முரளி மனோகர் தயாரிக்கிறார். படத்தின் கதைப்படி நானும் யாஷிகாவும் ஹாலிடே செல்வோம். அப்படி, செல்லும் இடத்தில் போனிலிருந்து செல்ஃபி எடுத்துக்கொள்வது போன்ற காட்சிகளைப் படமாக்கினார்கள். அந்தப் படங்களைத்தான் பட புரொமோஷனுக்காக எனது ஃபேஸ்புக்கிலும் இன்ஸ்டாவிலும் பகிர்ந்துகொண்டேன்.
மற்றபடி, எனக்கும் யாஷிகாவுக்கும் எல்லோரும் நினைப்பது போன்று காதலும் கிடையாது; கல்யாணமும் கிடையாது. எங்கள் புகைப்படங்களைப் பார்த்துவிட்டு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி எடுத்துக்கொள்கிறார்கள். வெளியூரில் இருந்ததால் உடனடியாக இதுகுறித்து எதுவும் பேசமுடியவில்லை” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மே மாத சிறந்த கிரிக்கெட் வீரர் விருது: யாருக்கு கிடைக்கும்?
“இன்னும் பேசுங்கள்” : ஆளுநருக்கு முதல்வர் சூடான பதில்!