லியோ : உண்மையில் ரூ.148.5 கோடி வசூலித்ததா?

சினிமா

தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமா வியாபார வட்டாரங்கள் அதிர்ந்து போயிருக்கிறது லியோ படத்தின் உலகளாவிய முதல் நாள் மொத்த வசூல் அறிவிப்பை கண்டு.

உலகம் முழுவதும் 10,000 திரையரங்குகள் வரை வெளியான ஜவான் திரைப்படம் முதல் நாள் 129.6 கோடி மொத்த வசூல் செய்திருந்த நிலையில் அதற்கு குறைவான திரையரங்குகளில் வெளியான லியோ முதல் நாள் உலகம் முழுவதும் 148.5 கோடி ரூபாய் மொத்த வசூல் என்று அறிவித்திருப்பது கண்டு திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் தமிழ்நாட்டில் 20 கோடி ரூபாய், இந்திய அளவில் 31.43 கோடி உலக அளவில் 46.32 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்திருந்த நிலையில் லியோ முதல் நாள் வசூல் 148.5 கோடி என்பது நடிகர் விஜய் தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்திய அளவில் வசூலில் சூப்பர்ஸ்டார் என்கிற பிம்பத்தை கட்டமைக்கின்றனர் என்கின்றனர் சினிமா வியாபார வட்டாரத்தில்.

ஒரு திரைப்படத்தின் வசூல் விபரங்கள் பொதுமக்களாலும், சினிமா ரசிகர்களாலும் புரிந்துகொள்ள முடியாத ஒன்று. இருந்தபோதிலும் சினிமா சம்பந்தமான செய்திகளை முந்தி தருகிறோம் என்கிற வேகத்தில் செய்திகளை வெளியிடும் இணையதளங்கள் தயாரிப்பாளர்கள், திரை நட்சத்திரங்களின் ஒலி பெருக்கிகளாக செயல்பட்டு வரும் தொழில்முறை சமூகவலைதள செயல்பாட்டாளர்களாலும் பாக்ஸ்ஆபீஸ் வசூல் என்பது நம்பகதன்மையற்றுபோனது என்கின்றனர் விநியோகஸ்தர்கள்.

இதற்கு காரணம் அதைப் பற்றி சினிமா வியாபாரிகள் பொதுவெளியில் விமர்சிக்க மாட்டார்கள் என்கிற தைரியம் மொத்த வசூல் என்பதை தங்கள் விருப்பபடியும், பிற நடிகர்களின் பட வசூலை முந்தியதாக அறிவித்து கதாநாயகனிடம் அடுத்த படத்திற்கு கால்ஷீட் வாங்க முயற்சிக்கின்றனர் என்கிறார் ஒரு தயாரிப்பாளர்.

விஜய் நடிப்பில் இந்த வருட தொடக்கத்தில் வெளியான வாரிசு படம் வசூல் சாதனை என அறிவித்து பின் அது சம்பந்தமான எந்த தகவலையும் ஊடகங்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் காணாமல்போனார்.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி, காலா படங்களின் முதல் நாள் வசூல் மொத்த வசூல்தொகையை பிரம்மாண்டமாக அறிவித்தார்கள்.

Rajinikanth's Kaala Kalikaraan BEATS Kabali - here's how - Bollywood News & Gossip, Movie Reviews, Trailers & Videos at Bollywoodlife.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

பின்னாளில் அந்த இரண்டு படங்களும் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது என்கிற தகவல்கள் வெளியானது வரலாறு. அதே போன்றுதான் லியோ படத்தின் முதல் நாள் வசூல் கணக்கு என்கின்றனர்.

பிராந்திய மொழியில் தயாராகிற ஒரு படத்தின் வசூல் அந்த மொழி பேசும் மாநிலத்தில் அதிகபட்சமாக வசூல் செய்ய வேண்டும். லியோ படத்தின் முதல் நாள் வசூல் என அறிவிக்கப்பட்டுள்ள 148.5 கோடியில் தமிழ்நாட்டின் மொத்த வசூல் சுமார் 30 கோடி ரூபாய் என்பதே திரையரங்க மற்றும் விநியோகஸ்தர்களின் கணக்கு.

விஜய் படங்களுக்கான அதிகபட்ச வசூல் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் மட்டுமே. தெலுங்கு மொழி பேசும், வட இந்திய மாநிலங்களில் குறைந்தபட்ச வசூல் செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கின்ற சூழலில் வெளிநாடுகளில் இந்திய பாக்ஸ்ஆபீஸ் வசூலை காட்டிலும் அதிகம் வசூல் செய்திருக்க வாய்ப்பு இல்லை என்கின்றனர் வெளிநாட்டு விநியோக வியாபாரத்தில் தொடர்புடையவர்கள்.

Vijay's 'Leo' releases in theatres: Fans hoot and dance inside cinema halls - India Today

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

லியோ படம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் அப்படம் பற்றிய எதிர்மறையான செய்திகளை வேறு தகவல்களை லியோ புரமோஷன் குழு சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவார்கள். படம் பற்றி தயாரிப்பு தரப்பும், லோகேஷ் கனகராஜும் கொடுத்த பிரமிப்பு படம் வெளியான அக்டோபர் 19 அன்று முதல் காட்சி முடிந்தவுடன் பொய்யாகி போனதுடன், லியோ படம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுவருகிறது.

முதல் நாள் ரஜினிகாந்த் படத்தின் வசூல் சாதனையான (2.0) 102 கோடியை முறியடிக்குமா என்கிற எதிர்பார்ப்பில் இருந்தவர்களுக்கு அகில இந்திய சூப்பர்ஸ்டார் என கூறப்படும் ஷாருக்கான் படத்தின் முதல் நாள் உலக சாதனையை முறியடிக்கும் வகையில் லியோ 148.5 கோடி முதல் நாள் வசூல் செய்தது என அதிரடியாக அறிவித்து லியோ படத்திற்கான எதிர்மறையான விமர்சனங்களில் இருந்து ஊடகங்களின் கவனத்தை திசை திருப்பி இருக்கிறது தயாரிப்பு தரப்பு.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

அம்பலவாணன்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: பாலச்சந்திரன்

”நூறு நாளில் 10 ஆயிரம் பாஜக கொடிக்கம்பங்கள்”: அண்ணாமலை சபதம்!

 

+1
0
+1
2
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *