விஜய் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த லியோ திரைப்படத்தின் படு மாஸான டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
விஜயை ஒரு வார்த்தைக்கூட பேசவிடாமல் மாஸ்டர் படத்தின் டீசரை வெளியிட்டு அசத்தியிருந்தார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
ஆனால் விஜய் குரலில் தான் லியோ டிரெய்லரே தொடங்குகிறது. தெருவில் நடக்கும் சீரியல் கில்லரின் கதையை விவரிப்பதுடன் தொடங்கி, அனிருத் குரலில் முடிகிறது டிரெய்லர்.
இதற்கிடையே வில்லனாக துரத்தும் சஞ்சய் தத், அர்ஜூன், போலீசாக எச்சரிக்கும் கெளதம் மேனன், மனைவியாக த்ரிஷா என படத்தில் நடித்துள்ள முக்கிய கதாப்பாத்திரங்களுக்கான காட்சிகள் விரிகின்றன.
படத்தின் எதிர்பார்ப்பை தூண்டும் விதத்தில் ஷார்ட் கன்னுடன் எண்ட்ரி கொடுக்கும் விஜய், குத்தலாக சிரிக்கும் மன்சூர் அலிகான், முறைக்கும் மிஷ்கின் போன்றோரின் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
மேலும் த்ரிஷாவிடம் கோபப்பட்டு கெட்டவார்த்தையில் பேசும் விஜயின் டயலாக் மூலம் அவர் இரட்டை வேடத்தில் நடித்துள்ளரா என்ற சந்தேகத்தையும் டிரெய்லர் எழுப்புகிறது.
இத்தனைக்கும் வலு சேர்க்கிறது அனிருத்தின் அதிரடியான பின்னணி இசை. வெளியான சில நிமிடங்களில் 5 மில்லியனுக்கும் மேலான பார்வைகளை லியோ டிரெய்லர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விஷாலின் லஞ்ச புகார்: மூன்று பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு!
டெட் ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்!