- கடந்த 2017 ஆம் ஆண்டு அறிமுக இயக்குநர் நிதிலன் இயக்கத்தில் வித்தார்த், பாரதிராஜா நடிப்பில் வெளியான குரங்கு பொம்மை திரைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜய் சேதுபதி தனது 50 வது படத்தை இயக்குநர் நிதிலன் இயக்குவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த படத்திற்கு ’மகாராஜா’ என்று பெயரும் வைக்கப்பட்டது.
சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில், அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில் சலூன் நாற்காலியில் கையில் அரிவாளுடன், காதில் கட்டு போட்டுக் கொண்டு, உடல் முழுக்க இரத்தத்துடன் விஜய் சேதுபதி அமர்ந்திருக்கும் காட்சி செம வைரலானது.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.
வரும் மே மாதம் 16 ஆம் தேதி மகாராஜா படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக “ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்” படத்தின் இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி தனது 51வது படத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதியின் 51வது படத்தை 7சிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
விடுதலை 2, பிசாசு 2, மகாராஜா, VJS 51, டிரெயின் என விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த படங்கள் வெளியாக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை எப்போது? : தலைமை காஜி அறிவிப்பு!
முடிவுக்கு வந்த மோதல் : மீண்டும் ஒன்று சேர்ந்த சூரி – விஷ்ணு விஷால்