இதுதான் மேடை நாகரிகமா ஷங்கர் அண்ட் மிஷ்கின்? 

சினிமா

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக கருதப்படுபவர் மிஷ்கின். கடந்த ஆகஸ்டு 12 வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெற்ற ‘கொலை’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், ” கொலை படத்தின் நாயகனான விஜய் ஆண்டனி நடித்த ஒரு படங்களைக் கூட இதுவரை தான் பார்க்கவில்லை” என்ற தகவலை வெளியிட்டார்.

பொதுவாக சினிமாவில் உள்ளவர்கள் தமிழில் வெளியாகும் நல்ல படங்களையும், மோசமான விமர்சனங்களுக்கு உள்ளாகும் படங்களையும் வெளியீட்டின்போது பார்க்கவில்லை என்றாலும் காலம் கடந்தாவது பார்த்துவிடுவார்கள்.

சினிமாவில் உதவி இயக்குநராக தன்னிடம் வாய்ப்பு கேட்டு வருபவர்களிடம் என்ன புத்தகங்கள் படித்திருக்கிறீர்கள், உலக சினிமாக்கள் பார்க்கும் பழக்கம் உண்டா என்று கேட்பது மிஷ்கின் வழக்கம்.

சினிமா நிகழ்ச்சிகளில்  உதவி இயக்குநர்கள், இயக்குநர்கள் நாவல்கள், இலக்கியங்களை வாசிக்க வேண்டும் என்றும், வெளிநாட்டு திரைப்படங்களை தொடர்ந்து பார்க்க வேண்டும் என்றும் அறிவுரை கூறுவார்.  

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகரானவர் விஜய்ஆண்டனி.  தமிழ் சினிமாவில், தான் நாயகனாக நடிக்கும் படங்களுக்கு பிச்சைக்காரன் போன்று எதிர்மறையான தலைப்புகளை வைத்து வணிகரீதியாக வெற்றிபெற்றவர்.

அவர் நடித்த ஒரு படத்தை கூட நான் இதுவரை பார்க்கவில்லை என்று விஜய் ஆண்டனியை மேடையில் வைத்துக்கொண்டு மிஷ்கின் கூறுவதை அகம்பாவம் என்பதா அறியாமை என்பதா என்கின்றனர் தமிழ் சினிமா இயக்குநர்கள் வட்டாரத்தில்.

சினிமாவில்  நடிகராக அறிமுகமாகி பத்து ஆண்டுகளைக் கடந்தவர் விஜய் ஆண்டனி. அவருடைய நடிப்பில் வெளிவந்த ‘பிச்சைக்காரன்’ படம்,  தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் கூட பெரிய வசூலைப் பெற்ற ஒரு படம்.

அந்த ஒரு படத்தைக் கூட மிஷ்கின் பார்க்கவில்லை என்பது ஆச்சரியம்தான். மிஷ்கின் அப்படிப் பேசியதைக் கண்டு என்ன ரியாக்‌ஷன் கொடுப்பது என்று தெரியாமல் அமைதியாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தார் மேடையில் இருந்த விஜய் ஆண்டனி.

ஒரு நடிகரின் படத்தின் விழாவில் கலந்து கொள்ள சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் முன் அவர் நடித்த படங்களை பார்க்க வேண்டும் அல்லது அவரைப்பற்றி விசாரித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற குறைந்தபட்ச புரிதல் கூட இல்லாதவராக இருக்கிறார் மிஷ்கின் என்கின்றனர் நாளைய இயக்குநர்கள் தரப்பில்.

இதே போன்றுதான் இயக்குநர் ஷங்கர் அவரது மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள விருமன் படத்தின்  ஆடியோ வெளியீட்டு விழா மதுரையில் நடந்தது.

அதில் பேசிய இயக்குனர் ஷங்கர்,  ‘இயக்குநர் முத்தையா ஏற்கனவே இயக்கிய படங்களை நான் பார்த்தது இல்லை’  என்று பேசியிருந்தார். இந்த இரண்டு பேச்சுகளும் சினிமா வட்டாரத்தில் விமர்சனத்தை கிளப்பியுள்ளன.

இராமானுஜம்

மாற்று உறுப்பு கிடைத்திருந்தால்… கணவர் நினைவில் மீனா எடுத்துள்ள உறுதிமொழி!

+1
0
+1
2
+1
1
+1
2
+1
2
+1
1
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *