இரும்புத்திரை, ஹீரோ படங்களை தொடர்ந்து பி.எஸ்.மித்ரனின் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2022ஆம் அண்டு வெளியான திரைப்படம் சர்தார். இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து கார்த்தி கேரியரில் பிளாக் பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது.
மேலும் அந்த படத்தின் முடிவில் இரண்டாம் பாகத்திற்கான லீட் கொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சர்தார் 2 பணிகள் தொடங்க உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. முதல் பாகத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் தான் இரண்டாம் பாகம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்க முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், தற்போது சர்தார் 2 படத்திற்கான பூஜை சென்னையில் வரும் பிப்ரவரி 2 நடைபெற இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வரும் மார்ச் மாதம் முதல் சர்தார் 2 படப்பிடிப்பில் கார்த்தி கலந்துக் கொள்வார் என்றும் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
பிகார் ஆட்சி மாற்றம் : நிதிஷ்குமார் – தேஜஸ்வி சொல்வதென்ன?
Australia Open : சாம்பியன் பட்டம் வென்று இத்தாலி வீரர் சாதனை!